×

ரூ.88.50 லட்சம் மதிப்பீட்டில் மரம் அறுக்கும் இயந்திரம்

சென்னை: சென்னை மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் உள்ள மரங்களில் பொது மக்களுக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை அகற்றி சீரமைக்கவும் மற்றும் பருவநிலை மாறுபாடுகளின் காரணமாக ஏற்படுகின்ற பேரிடர் நிகழ்வுகளால் முறிந்து விழும் மரங்களை அகற்றிட தற்போது 6 எண்ணிக்கையிலான ஹைட்ராலிக் மூலம் இயங்கும் மரம் அறுக்கும் இயந்திரங்கள்   பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், கூடுதலாக 3 எண்ணிக்கையில் ரூ.88.50 லட்சம் மதிப்பீட்டில் மரம் அறுக்கும் இயந்திரங்கள் கொள்முதல் செய்து   பணியில் ஈடுபடுத்தப்படும்.

ஜிபிஎஸ் மூலம் கண்காணிப்பு: சென்னை   மாநகராட்சிக்குட்பட்ட கடற்கரை மணற்பரப்பில் உள்ள குப்பைகள், நெகிழி   கழிவுகள் மற்றும் உடைந்த கண்ணாடி துண்டுகள் ஆகியவற்றினை அகற்றி,   கடற்கரையினை சுத்தம் செய்யும் பணிக்கென ஏற்கனவே 8 எண்ணிக்கையில் டிராக்டர்   மூலம் இயக்கப்படும், மணலை சலித்து சுத்தப்படுத்தும் இயந்திரங்கள்   பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், கூடுதலாக 2 எண்ணிக்கையில் டிராக்டர்   மூலம் இயக்கப்படும், கடற்கரை மணலை சலித்து சுத்தப்படுத்தும் இயந்திரங்கள் ரூ.1.88 கோடி மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்படும்.

தூய்மை பணிக்கென   பயன்படுத்தப்படும் 289 எண்ணிக்கையிலான வாகனங்களின் செயல் திறனை ஜிபிஎஸ்   கருவியின் மூலம் கண்காணித்து அவற்றின் செயல் திறனை மேம்படுத்திட ரூ.1.08 கோடி   மதிப்பீட்டில் ஜிபிஎஸ் கருவிகள் 3 ஆண்டு காலத்திற்கு வாடகை ஒப்பந்த   முறையில் பொருத்தி பராமரிக்கும் பணி மேற்கொள்ளப்படும்.

Tags : 88.50 lakhs worth of wood sawing machine
× RELATED ரேஷன் பொருள் கடத்தல் வழக்கில்...