×

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனி பெருவிழாவையொட்டி வரும் 28ம் தேதி முதல் ஏப். 6 வரை போக்குவரத்து மாற்றம்..!

சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனி பெருவிழாவையொட்டி வரும் 28ம் தேதி முதல் ஏப். 6 வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கபாலீஸ்வரர் திருக்கோயிலின் வருடாந்திர பங்குனி பெருவிழா 28.03.2023 முதல் 06.04.2023 வரை நடைபெறுவதை முன்னிட்டு பொது மக்களின் போக்குவரத்து வசதியை கருதி தேவைப்படும் நேரங்களில் பின் வரும் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படும். மேற்கண்ட நாட்களில் கீழ்கண்டவாறு கபாலீஸ்வரர் கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து கோயிலை நோக்கி வாகனங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. தேவடி தெருவிலிருந்து நடுத்தெரு மற்றும் சித்ரகுளம் வடக்கு வரை வாகனங்களுக்கு அனுமதி கிடையாது. நடுத் தெரு மற்றும் சுந்தரேஸ்வரர் தெருவிலிருந்து கிழக்கு மாட தெரு வை வாகனங்களுக்கு அனுமதி கிடையாது.

வடக்கு சித்ரகுளத்திலிருந்து கிழக்கு மாட தெரு வரையிலும், மேற்கு சித்ரகுளம் தெருவிலிருந்து தெற்கு மாட தெரு வரையிலும், டி.எஸ்.வி. கோவில் தெருவிலிருந்து தெற்கு மாட தெரு வரையிலும், ஆடம்ஸ் தெருவிலிருந்து தெற்கு மாட தெரு வரையிலும், ஆர்.கே.மடம் சாலையிலிருந்து தெற்கு மாட தெரு வரையிலும், ஆர்.கே.மடம் சாலையிலிருந்து வடக்கு மாட தெரு வரையிலும், கச்சேரி சாலையிலிருந்து மத்தள நாராயணன் தெரு வரையிலும், லஸ் சந்திப்பிலிருந்து ஆர்.கே.மடம் சாலை வரையிலும் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் புனிதமேரி சாலையிலிருந்து ஆர்.கே.மடம் சாலை வரையிலும் டாக்டர் ரங்கா சாலையிலிருந்து வெங்கடேச அலங்காரம் சாலை வரையிலும், முண்டகக்கன்னியம்மன் கோவில் தெருவில் இருந்து கல்விவாறு தெரு நோக்கி செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

1. இராயப்பேட்டை நெடுஞ்சாலையிலிருந்து லஸ் சந்திப்பு வழியாக அடையார் செல்லும் வாகனங்கள் லஸ், லஸ் சர்ச் ரோடு, டிசில்வா ரோடு, பக்தவச்சலம் ரோடு, ரங்கா ரோடு, சி.பி.ராமசாமி சாலை, ஆர்.எ.புரம் 2வது பிரதான சாலை, வெங்கட கிருஷ்ணா ரோடு, தேவநாதன் தெரு, சென்ட் மேரிஸ் சாலை, ஆர்.கே.மடம் சாலை வழியாக மந்தைவெளி அடையலாம்.

2. அடையாரிலிருந்து லஸ் சந்திப்பு வழியாக இராயப்பேட்டை செல்லும் வாகனங்கள் ஆர்.கே.மடம் ரோடு, மந்தைவெளி சந்திப்பு , வெங்கட கிருஷ்ணா ரோடு, சிருங்கேரி மடம் சாலை, வாரன்ரோடு, ரங்கா ரோடு,கிழக்கு அபிராமபுரம் முதல் தெரு, லஸ் அவென்யூ. அமிர்தாஞ்சன் சந்திப்பு, கற்பகாம்பாள் நகர்,பி.எஸ் சிவசாமி சாலை,இராயப்பேட்டை நெடுஞ்சாலை வழியாக இலக்கை அடையலாம்.

3. ஆழ்வார்பேட்டை சந்திப்பிலிருந்து லஸ் சந்திப்பு வழியாக செல்லும் வாகனங்கள் ஆலிவர் சாலை,பி.எஸ்.சிவசாமி சாலை சந்திப்பு, விவேகானந்தர் கல்லூரி இராயப்பேட்டை நெடுஞ்சாலை வழியாக இலக்கை அடையலாம்.

4. மயிலாப்பூர் கோயில் குளம் அருகில் உள்ள மாநகர பேருந்து நிறுத்தம் லஸ் சர்ச் சாலையில் அமிர்தாஞ்சன் கம்பெனி அருகில் மாற்றப்பட்டுள்ளது.

5.மார்ச் 30 அதிகாரநந்தி திருவிழா அன்று காலை 05.00 மணி முதல் நிகழ்ச்சி முடிவடையும் வரையிலும், 03.04.2023 தேர்திருவிழா அன்று காலை 05.00 மணி முதல் நிகழ்ச்சி முடிவடையும் வரையிலும் மற்றும் 04.04.2023 அன்று அறுபத்துமூவர் திருவிழா அன்று 13.00 மணிமுதல் நிகழ்ச்சி நிறைவடையும் வரையிலும் மேற்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் செயல் படுத்தப்படும்.

வாகன நிறுத்த தடை
30.03.2023 அதிகாரநந்தி திருவிழா 03.04.2023 தேர்திருவிழா அன்றும் 04.04.2023 அறுபத்துமூவர் திருவிழா அன்றும் சன்னதி தெரு, கிழக்கு மாடவீதி, தெற்கு மாடவீதி, இராமகிருஷ்ணா மடம் சாலை மற்றும் வடக்கு மாடவீதி ஆகிய இடங்களில் எந்த வாகனமும் நிறுத்த அனுமதியில்லை. அந்த நாட்களில் கீழ்கண்ட இடங்களில் வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

1. கிழக்கு மற்றும் வடக்கு புறம் இருந்து மைலாப்பூர் குளம் நோக்கி வரும் பக்தர்களின் வாகனங்கள் லஸ் சர்ச் ரோடு, காமதேனு கல்யாண மண்டபம் எதிரில் நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.(100 இரு சக்கர வாகனம் மற்றும் 15 கார்).

2. மேற்கு மற்றும் தெற்கு புறம் இருந்து வரும் பக்தர்களின் வாகனங்கள் சாய்பாபா கோயில் அருகில், வெங்கடேச அக்ரகாரம் திருமயிலை பறக்கும் இரயில்வே நிலைய மேம்பாலத்தின் கீழ் நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.( 100 இரு சக்கர வாகனம் மற்றும் 30 கார்).

3. செயின்ட் மேரீஸ் சாலை மற்றும் ஆர்.கே.மடம் சாலையிலிருந்து மயிலாப்பூர் குளம் நோக்கி
வரும் பக்தர்களின் வாகனங்கள் P.S. பள்ளி அருகே கபாலீஸ்வரர் கோவில் மைதானத்தில் நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. (300 இரு சக்கர வாகனம் மற்றும் 50 கார்). 4. காவல்துறை வாகனங்கள் சுந்தரேஸ்வரர் தெருவில் உள்ள ரசிக ரஞ்சனி சபா வளாகத்தில் நிறுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. (150 இரு சக்கர வாகனம் மற்றும் 30 கார்). வாகன ஓட்டுநர்களும் பொதுமக்களும் ஒத்துழைப்பு நல்குமாறு போக்குவரத்து காவல்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Tags : Kapaleeswarar Temple ,Mayalapur ,Bankuni Peru Festival , Mylapore Kapaleeswarar Temple will be open from 28th April on the occasion of Panguni festival. Traffic change till 6..!
× RELATED பங்குனி பெருவிழாவையொட்டி மயிலாப்பூர்...