×

கர்நாடக சட்டமன்ற தேர்தல்: 124 தொகுதிகளுக்கு முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்!!


பெங்களூரு: கர்நாடக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி முதல்கட்டமாக 124 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. கர்நாடாகாவில் ஆளும் பாஜக அரசின் பதவிக்காலம் வரும் மே 24ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. அதற்கு முன்னதாக புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தை தேர்தல் ஆணையம் பெற்றுள்ளது. அதற்கான தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் அதற்கு முன்னதாகவே தேர்தல் களம் அம்மாநிலத்தில் சூடு பிடித்துள்ளது. பாஜக சார்பில் பிரதமர் மோடி, அமைச்சர் அமித்ஷா, கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோரும் காங்கிரஸ் சார்பில் அக்கட்சி தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்டோரும் மக்களிடம் ஆதரவை திரட்டி வருகின்றனர்.

மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி சார்பில் அக்கட்சியின் தேசிய தலைவர் தேவகவுடா, மூத்த தலைவர் குமாரசாமி உள்ளிட்டோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் பாஜகவிடம் இருந்து ஆட்சியை கைப்பற்ற நினைக்கும் காங்கிரஸ் கட்சி முதற்கட்டமாக 124 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா வருணா தொகுதியிலும் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார் கனகபுரா தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். தேவனஹள்ளியில் முனியப்பா, பெங்களூரு ராஜாஜிநகரில் புட்டண்ணா, ஆர்.ஆர். நகர் குசுமா, பெல்காம் ஊரகத் தொகுதியில் லட்சுமி ஹெப்பால்கர், தாவாங்கேரே தெற்குத் தொகுதியில் சாமனூர் சிவசங்கரப்பா, எம். பி பாட்டீலுக்கு பாபலேஷ்வர் சீட்டு வழங்கப்பட்டு உள்ளது.

Tags : Karnataka Assembly Election , Karnataka, Assembly, Election, Candidate, Congress
× RELATED கருத்துக்கணிப்பில் நம்பிக்கை இல்லை: டி.கே.சிவகுமார் கருத்து