×

தூக்கமின்மையை வெல்ல..!

நன்றி குங்குமம் டாக்டர்

தூக்கமின்மை (Insomnia) இன்று உலகளாவிய ஒரு வாழ்க்கைமுறை சிக்கல். இரவுப் படுக்கையில் விழுந்ததும் தூக்கமில்லாமல் தவிப்பது, அடிக்கடி இரவில் எழுவது, நேரமே எழுந்து கண் எரிச்சலோடு இருப்பது, போதுமான தூக்கம் இல்லை என்று அதிருப்தியாக உணர்வது தூக்கமின்மை பிரச்சனையின் அறிகுறிகள்.

மனஅழுத்தத்தைக் கட்டுப்படுத்துங்கள்

*பி.எம்.ஆர் எனப்படும் ப்ரோகிரசிவ் மசில் ரிலாக்சேஷன் என்ற டெக்னிக் மூலம் தசைகளை தளர்வாக்கி உறங்க முயற்சிக்கலாம்.

*பிராணாயாமம் எனப்படும் ஆழமான மூச்சுப் பயிற்சி ஆழ்ந்த தூக்கத்துக்கு உதவும்.

சுற்றுச்சூழலை மாற்றியமையுங்கள்

*அதிக சத்தம், மோசமான வாசனை, அதிக வெளிச்சம், அதிக வெப்பம் அல்லது குளிர்ச்சி ஆகியவை இல்லாத சூழலில் தூங்க முயற்சியுங்கள்.

*வசதியற்ற படுக்கையிலும் குறட்டைவிடும் நபரோடும் உறங்காதீர்கள்.

*பாதுகாப்பு இல்லை என்ற மனநிலை இருக்கும் இடத்தில் உறங்காதீர்கள்.

*குடும்பத்தினர் அரவணைப்பை நாட மறக்காதீர்கள்.

தவிர்க்க!

*காபின், ஆல்கஹால், புகையிலையை இரவில் உறங்கும் முன் தவிர்த்திடுங்கள்.

*படுக்கையில் மொபைலை நோண்டுவது, லேப் டாப்பில் வேலை செய்வதைத் தவிர்த்திடுங்கள்.

கடைப்பிடிக்க!

* படுக்கையில் தூக்கம் வரவைக்கும் இனிய இசை கேட்பது, நல்ல நூல்களை வாசிப்பது என்ற பழக்கங்களை உருவாக்கிக்கொள்ளுங்கள்.

* தினசரி ஒரு மணி நேரம் அல்லது பத்தாயிரம் தப்படிகள் நடக்க தவறாதீர்கள்.

உடல் நலத்தை கவனியுங்கள்

பதற்றம், மெனோபாஸ் போன்ற சில உடலியல் சூழல்கள் உறக்கமின்மையை உருவாக்கும் முக்கிய காரணிகள். எனவே, மருத்துவரை நாடி அதற்கான சிகிச்சை பெறுங்கள்.

தொகுப்பு :  இளங்கோ

Tags :
× RELATED கண்ணைக் கட்டிக் கொள்ளாதே!