×

வாசகர் பகுதி

நன்றி குங்குமம் தோழி

ஆரோக்கிய நிவாரணி சீரகம்


*சீரகத்தை நன்கு வறுத்து தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து அருந்தி வந்தால் வறட்டு இருமல் குறையும்.

*சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த நீர் பருகினால், தலைசுற்றல், மயக்கம் குறையும்.

*அதிகமாக பேதி ஏற்பட்டால் சீரகம், ஓமம் இரண்டையும் கலந்து கசாயம் செய்து சாப்பிட பேதி கட்டுப்படும்.

*பசியின்மை, குமட்டலுக்கு சீரகத்தை எலுமிச்சை சாறில் ஊறவிட்டு பின் காயவைத்து சாப்பிட சரியாகும்.

*சீரகத்தை நன்கு வறுத்து பொடியாக்கி, கருப்பட்டியுடன் கலந்து சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி சரியாகும்.

*தண்ணீரில் சிறிது சீரகத்தை போட்டு கொதிக்க வைத்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர செரிமானக் கோளாறு, வயிற்று வலியும் தீரும்.

*தினமும் கொதிக்க வைத்த சீரக நீரை குடித்து வர நோய் எதிர்ப்பு சக்தியும், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்க வழி செய்யும். சுவாச கட்டமைப்புகளில் நன்மையும், சளியை குணப்படுத்தவும் உதவும்.

தொகுப்பு: எஸ். மாரிமுத்து, சென்னை.

Tags :
× RELATED கவுன்சலிங் ரூம்