×

ஈவிகேஎஸ்.இளங்கோவனுக்கு 177வது இருக்கை

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2023-24ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நேற்று காலை 10 மணிக்கு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.  பட்ஜெட் தாக்கலின் போது அனைத்துக்கட்சி தலைவர்களும் சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்றனர். இதில் ஈரோடு கிழக்கு தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஈவிகேஎஸ்.இளங்கோவனுக்கு 177வது இருக்கை ஒதுக்கப்பட்டன. எதிர்க்கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 2வது வரிசையில் சிந்தனை செல்வனுக்கு பின்புறம், ஈவிகேஎஸ்.இளங்கோவனுக்கு இருக்கை ஒதுக்கப்பட்டது.


Tags : EVKS.Elangovan. , 177th seat for EVKS.Elangovan
× RELATED காய்ச்சல் பாதிப்பால் ஈவிகேஎஸ்.இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி