×
x

போனில் தகவல் தெரிவித்துவிட்டு காதலி வீட்டில் தூக்கிட்டு இன்ஜினியர் தற்கொலை

வேளச்சேரி: புதுப்பேட்டை டிரைவர் தெருவை சேர்ந்தவர் மேலை நாசர். இவரது மனைவி ஷகிலா. இவர்களது மகன் மொய்தீன் அமீர் (23),  சாப்ட்வேர் இன்ஜினியர். இவர், பெரும்பாக்கம் 1வது மெயின் ரோடு பகுதியை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் பாரதி என்பவரை காதலித்து வந்துள்ளார்.  பாரதி வசித்துவந்த வீட்டுக்கு மொய்தீன் அமீர் அடிக்கடி சென்று வந்ததுடன், பலதடவை அந்த வீட்டில் தங்கியதாக கூறப்படுகிறது. இதனால், அவரிடமும் வீட்டின் ஒரு சாவி இருந்துள்ளது. பாரதி வேலை விஷயமாக கடந்த 15ம் தேதி டெல்லிக்கு சென்றுவிட்டார். இந்நிலையில், மொய்தீன் அமீர் நீண்ட நேரம் செல்போனில் பேசுவதை அவரது தாய் கண்டித்துள்ளார். இதனால், கோபித்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறிய அவர், தனது காதலி வீட்டுக்கு சென்று தங்கியதாக தெரிகிறது.

நேற்று மதியம் மொய்தீன் அமீர், தனது காதலியை செல்போனில் தொடர்பு கொண்டு, ‘‘நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார். இதனால் பதற்றம் அடைந்த பாரதி உடனடியாக தனது தம்பி அரிகரனுக்கு செல்போனில் தகவல் தெரிவித்து தனது வீட்டுக்கு போய் பார்க்கும்படி கூறியுள்ளார். இதன்படி அரிகரன் அங்கு சென்று பார்த்தபோது, மொய்தீன் அமீர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. தகவலறிந்த பெரும்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மொய்தீன் அமீர் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags : The engineer committed suicide by hanging himself at his girlfriend's house after giving information over the phone
× RELATED கான்ஸ்டபிள் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை