×

ராஜஸ்தானில் புதிதாக 19 மாவட்டங்கள் உதயம்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் புதிதாக 19 மாவட்டங்களை உருவாக்கி முதல்வர் அசோக் கெலாட் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முதல்வர் அசோக் கெலாட் 19 புதிய மாவட்டங்கள், 3 புதிய கோட்டங்கள் பற்றிய அறிவிப்பை வௌியிட்டுள்ளார்.

தலைநகர் ஜெய்ப்பூரை 4 சிறிய மாவட்டங்களாக பிரித்து  அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய மாவட்டங்கள் அமைப்பது தொடர்பான பணிகளுக்காக முதற்கட்டமாக ரூ.2 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் தற்போது 33 மாவட்டங்கள் உள்ள நிலையில், புதிதாக உருவாக்கப்படும் 19 மாநிலங்களுடன் சேர்த்து மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கை 52ஆக உயர்ந்துள்ளது.

Tags : Rajasthan , 19 new districts will emerge in Rajasthan
× RELATED மோடியின் வெறுப்பு பேச்சு தேர்தல் ஆணையம் விசாரணை