×

மலை பாதையில் முகாமிட்ட காட்டு யானைகளை வனத்துறையினர் விரட்டினர்

குன்னூர்: கடும் வறட்சி காரணமாக உணவு மற்றும் தண்ணீரை தேடி காட்டு யானைகள் அடிக்கடி நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதிக்கு  படையெடுத்து  வருகின்றன. இந்நிலையில், குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதையில்  சாலையை கடக்க 3 காட்டு யானைகள் நேற்று வந்தன.  அப்போது, வனத்துறையினர் இருபுறமும் வாகனங்களை நிறுத்தி  யானைகள் செல்வதற்கு ஏதுவாக வழி ஏற்படுத்தி கொடுத்தனர்.

பின்னர்,  அங்கிருந்து ரயில் பாதை வழியாக குடியிருப்புக்குள் நுழைய முயன்ற 3 யானைகளை வனத்துறையினர்  போராடி அருகே உள்ள வனப்பகுதிக்குள் விரட்டினர். மலை ரயில் நிறுத்தம்: இந்நிலையில் நேற்று குன்னூரில் இருந்து மலை ரயில் புறப்பட்டு மேட்டுப்பாளையம் வந்து கொண்டிருந்தது. அப்போது 3 யானைகளும் தண்டவாளம் வழியாக நடந்து வந்தன. இதைப்பார்த்த  டிரைவர்கள் ரயிலை உடனடியாக நிறுத்தினர். யானைகள் நகர்ந்த பிறகு ரயில் புறப்பட்டு சென்றது.


Tags : The forest department chased away the wild elephants encamped on the mountain pass
× RELATED பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் ஆம்ஆத்மி...