×

வானவில் கூட்டணி பலவண்ணப் பழங்கள் தரும் பலன்கள்!

நன்றி குங்குமம் டாக்டர்

டயட்டீஷியன் கோவர்த்தினி

பழங்கள் சாப்பிடுவது ஆரோக்கியமான பழக்கம் என அனைவருக்குமே தெரியும். ஆனால், பழங்களை எப்படிச் சாப்பிட வேண்டும் என்பது பலருக்கும் தெரிவதில்லை. பழங்களை ஜூஸாகக் குடிக்க கூடாது, அப்படியே கடித்துத்தான் சாப்பிட வேண்டும். அப்போதுதான் உடலுக்கு ஊட்டச்சத்து முழுமையாகக் கிடைக்கும். மேலும், பல வண்ணப் பழங்கள் இருப்பதை அறிவோம். ஒவ்வொரு நிறத்துக்கும் ஓர் குணம் உண்டு. எனவே, அதனை அறிந்து தினசரி ஒருவண்ண பழம் என வானவில் கூட்டணி அமைத்துப் பழங்களைச் சாப்பிடுவது நல்ல பலன் தரும்.

பச்சை நிறப் பழங்கள்

பச்சைத் திராட்சை, பச்சை ஆப்பிள், பேரிக்காய், பச்சை வாழைப்பழம், பீன்ஸ், கோஸ்.


இதன் க்ளோரோஃபில் என்ற நிறமிதான் பச்சை வண்ணத்துக்குக் காரணம். குளோரோஃபில், நம் உடலில் பாக்டீரியா வளர்ச்சியைக் குறைத்து, புதிய திசுக்கள் வளர்ச்சிக்கும் உதவுகின்றன. நார்ச்சத்து, லுடீன், கால்சியம், வைட்டமின் சி, பீட்டா கரோட்டின் உள்ளிட்ட உயிர்ச்சத்துக்கள் இதில் உள்ளன. ஆன்டிபாக்டீரியல் மற்றும் ஆன்டிஃபங்கல் ரசாயனம் இதில் உள்ளதால் நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்துவதோடு புற்றுநோய்க்கான வாய்ப்பைக் குறைக்கிறது.

கெட்ட கொழுப்பைக் குறைத்து இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. நோய் குணமாகும் வேகத்தை இது 25 சதவிகிதம் வரை விரைவாக்கு
கிறது. இதனோடு, எலும்பு, தசைகள் மற்றும் மூளை வலுப்பெற இந்தக் காய்கறியும் பழங்களும் உதவுகின்றன.

மஞ்சள்  ஆரஞ்சு நிறப் பழங்கள்

மாம்பழம், அன்னாசிப்பழம், கமலா ஆரஞ்சுப்பழம், கிர்ணிப்பழம், பூசணி, எலுமிச்சை.

இவற்றில் அதிக அளவில் பீட்டா கரோட்டின், ஃபிளேவனாய்ட்ஸ், பொட்டாசியம், வைட்டமின் சி ஆகியவை இருக்கின்றன. வயதாவதால் உருவாகும் திசுக் குறைபாடுகளைத் தவிர்க்கிறது. புற்றுநோய்க்கான வாய்ப்பைக் குறைக்கிறது. கெட்ட கொழுப்பைக் குறைத்து, இதயத்தைப் பாதுகாக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. திசுக்களுக்கு இடையேயான தொடர்பையும் வலுப்படுத்துகிறது. பொட்டாசியம் உடல் உள் உறுப்புகளுக்கு வலுவைக் கொடுக்கிறது.

சிவப்புப் பழங்கள்

சிவப்பு ஆப்பிள், மாதுளை, தக்காளி, வெங்காயம், தர்பூசணி, செர்ரி, ஸ்ட்ராபெர்ரி, பீட்ரூட்.

சிவப்பு நிறப் பழங்களில் லைக்கோபின் என்ற கரோட்டினாய்ட் உள்ளது. இதுவே அதன் சிவப்பு நிறத்துக்கு அடிப்படைக் காரணம். உடலுக்கு அவசியமான ஆன்டிஆக்சிடன்ட் இது. உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதும் எல்டிஎல் எனப்படும் கெட்ட கொழுப்பைக் கட்டுப்படுத்துவதும் இந்த ஆன்டிஆக்சிடன்டின் முக்கியப் பணி. சூரியனின் புற ஊதாக் கதிர்களால் ஏற்படும் சருமப் பாதிப்புகளில் இருந்து நம்மைக் காப்பதும் இந்த சத்துதான். மேலும், சிலவகையான புற்றுநோய்க்கான வாய்ப்பையும் குறைக்கிறது. இந்த வகைப் பழங்களில் உள்ள ஊட்டச்சத்துக்கள் நினைவாற்றல் பாதிப்பு நோய் வருவதற்கான வாய்ப்பைத் தவிர்க்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

Tags :
× RELATED பலாப்பழத்தின் பயன்கள்!