×

பாரம்பரியம் மணக்கும் ஹெல்த்தி ரெசிப்பிகள்!

நன்றி குங்குமம் டாக்டர்

ஸ்பெஷல் பூசணி அவியல்


தேவையானவை

வெள்ளைப் பூசணி    -    ஒரு துண்டு
மஞ்சள் பூசணி    -    ஒரு துண்டு
கருணைக்கிழங்கு    -    100 கிராம்
அவரைக்காய்    -    100 கிராம்
கொத்தவரங்காய்    -    100 கிராம்
சௌசௌ (கத்திரிக்காய்), கருணைக்கிழங்கு,
வாழைக்காய், கேரட் - தலா ஒன்று
பீன்ஸ்    -    10
முருங்கைக்காய்    -    ஒன்று
மாங்காய்    -    100 கிராம்
உரித்த மொச்சைக் கொட்டை, காராமணி,
துவரை (மூன்றும் சேர்த்து) - 200 கிராம்
தயிர்    -    200 மில்லி
கறிவேப்பிலை    -    ஒரு ஆர்க்கு
சீரகம்    -    ஒரு டீஸ்பூன்
உப்பு    -    தேவைக்கேற்ப
தேங்காய் எண்ணெய்    -    ஒரு குழிக்கரண்டி + ஒரு டீஸ்பூன்.

அரைக்க:

தேங்காய் துருவல்    -    ஒரு கப்
பச்சை மிளகாய்    -    8
சீரகம்    -    ஒரு டீஸ்பூன்
பெருங்காயத்தூள்    -    அரை டீஸ்பூன்

பக்குவம்:


அரைக்கக் கொடுத்துள்ளவற்றை விழுதாக அரைக்கவும். கருணைக்கிழங்கு, வள்ளிக்கிழங்கு, கேரட், பீன்ஸ், அவரைக்காய், கொத்தவரங்காய், மாங்காய், வெள்ளைப் பூசணி, மஞ்சள் பூசணி, வாழைக்காய், சௌசௌ, முருங்கைக்காய் ஆகியவற்றை ஒரு இன்ச் அளவில் வெட்டி குக்கரில் சேர்த்து, உரித்த மொச்சை, துவரை, காராமணி சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்து ஒரு விசில்விட்டு இறக்கவும். பின்பு அதில் அரைத்த விழுது சேர்த்து நன்கு கலக்கவும். ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெயில் சீரகம், கறிவேப்பிலை தாளித்து சேர்த்து, தயிரும் ஒரு குழிக்கரண்டி தேங்காய் எண்ணெயும் சேர்த்து நன்கு கலந்தால், சுவையான அவியல் தயார்.

பலன்கள்:

பூசணிக்காயில் உள்ள வைட்டமின் சத்துக்கள் உடலை வலுவாக்கும். மேலும் மஞ்சள் பூசணியிலும் மாங்காயிலும் நிறைந்துள்ள பொட்டாசியம் சத்து சருமத்தை பொலிவாக்கும். உடல் தசைகளை வலுவாக்கும். உடலில் உள்ள தேவையற்ற கெட்ட நீரை கரைக்கும். முருங்கைக்காயின் இரும்புச்சத்து ரத்தத்தைப் பெருக்கும்.

பச்சைப்பயறு குதிரைவாலி பொங்கல்


தேவையானவை

பச்சைப்பயறு    -    100 கிராம்
குதிரைவாலி    -    200 கிராம்
மிளகு     -    ஒரு டீஸ்பூன்
சீரகம்     -    ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை    -    ஓர் ஆர்க்கு
இஞ்சித் துருவல்    -    ஒரு டீஸ்பூன்
பெருங்காயத்தூள்    -    ஒரு சிட்டிகை
தண்ணீர்    -    5 டம்ளர்
முந்திரி    -    20
உப்பு    -    தேவைக்கேற்ப
நெய்    -    75 கிராம்.

பக்குவம்:

வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய்விட்டு பச்சைப்பயற்றை வறுத்துக்கொள்ளவும். பின்னர் குக்கரில் 5 டம்ளர் தண்ணீர்விட்டு கொதிக்கும்போது வறுத்த பச்சைப்பயறு, குதிரைவாலி, உப்பு, இஞ்சித் துருவல் சேர்த்துக் கலந்து குக்கரை மூடி, வெயிட் போட்டு இரண்டு (அ) மூன்று விசில்விட்டு அடுப்பை நிறுத்தவும். பின்பு சிறிய கடாயில் மீதமுள்ள நெய்விட்டு, மிளகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து, பெருங்காயத்தூள், முந்திரி சேர்த்து வறுத்து குக்கரில் உள்ள பொங்கலில் கலக்கவும்.பலன்கள்: பச்சைப்பயிறிலும் குதிரைவாலியிலும் நிறைந்துள்ள புரதச்சத்து உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும். மேலும் குதிரைவாலியில் உள்ள இரும்புச்சத்து ரத்தத்தைப் பெருக்கும். எலும்புகளை வலுவாக்கும். மிளகின் ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை
மேம்படுத்தும்.

சாமை டிலைட்

தேவையானவை:

சாமை    -    200 கிராம்,
பால்    -    அரை கப்,
தயிர்     -    ஒரு கப்,
வெண்ணெய்     -    2 டீஸ்பூன்,
பெருங்காயத்தூள்     -    ஒரு சிட்டிகை,
உப்பு     -     தேவையான அளவு.
தாளிக்க:
கடுகு மற்றும் பெருங்காயத்தூள் - தலா அரை டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய்     -     2
எண்ணெய்     -    2 டீஸ்பூன்.

மேலே தூவ:

துருவிய மாங்காய்,
கேரட் மற்றும் வெள்ளரி - ஒரு டேபிள் ஸ்பூன்.
நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு.

பக்குவம் :

சாமையுடன் உப்பு, பெருங்காயத்தூள், பால் சேர்த்து வேக விட்டு ஆறியதும் தயிர், வெண்ணெய் சேர்க்கவும். தாளிக்கும் பொருட்களைத் தாளித்து சேர்த்து, மேலே மாங்காய், கேரட், வெள்ளரி, கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

பலன்கள்: சாமையில் புரதச்சத்தும் இரும்புச்சத்தும் கார்போஹைட்ரேட்டும் நிறைந்துள்ளன. இது உடலை வலுவாக்கி சோர்வற்று உழைப்பதற்கான ஆற்றலைத் தரும்.

தொகுப்பு - திலீபன் புகழ்

Tags :
× RELATED மாறும் மாதவிடாய் சுழற்சி…