×

வெங்காயம் நோயின் பாதுகாவலன்!

நன்றி குங்குமம் தோழி

வாசகர் பகுதி

முருங்கைக்காயைத்தான் காய்கறிகளில் ஆரோக்கியமான உண வுன்னு சொல்லக்கேட்டு இருப்பீர்கள். அதில் உண்மை யில்லை. அதைவிட ஆரோக்கியமானது வெங்காயம். இதில் அப்ரோடிஸியாக் பொட்டன்ஷியல் மற்றும் ஆரோக்கியத்தை தூண்டும் பொருட்கள் உள்ளன. தினமும் வெங்காயத்தை மட்டும் சாப்பிட்டு நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ்ந்ததாக ஒரு நபர் கின்னசிலேயே இடம் பிடித்திருக்கிறார்.

மிகச்சிறிய குளவியோ, தேனீயோ கொட்டிவிட்டால் உயிருக்கு ஆபத்தாகக்கூட முடிந்துவிடுவது உண்டு. தேனீ போன்றவை கொட்டி விட்டால் வீட்டில் உள்ள பெரியவர்கள் உடனே வெங்காயத்தை எடுத்துத் தேய்த்துக் கொள்ளுங்கள் என்பார்கள். வெங்காயத்தில் உள்ள ஒரு என்சைம் உடலில் வலியையும், அழற்சியையும் உண்டாக்குகின்ற ப்ராஸ்டாகிளாண்டின்ஸ் என்ற கூட்டுப்பொருளை சிதைத்து விஷத்தை முறிக்கிறது.

ஒரு நாளைக்கு ஓர் ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரை வீட்டுக்குள் அனுமதிக்கத் தேவையில்லை என்பார்கள். அதைப்போல வெங்காயத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நீண்டகாலம் ஆரோக்கியமாக வாழலாம். வெங்காயத்தை பச்சையாக சமைத்து, சூப் அல்லது சாலட்டாக்கிச் சாப்பிடலாம். வெங்காயம் ஒரு நல்ல மருந்து பொருள்.இதை இதயத்தின் தோழன் என்று சொல்லலாம். இதிலுள்ள கூட்டுப்பொருட்கள் ரத்தத்தில் கொழுப்பு சேர்வதை இயல்பாகவே கரைத்து உடலெங்கும் ரத்தத்தை கொழுப்பில்லாமல் ஓட வைக்க உதவி செய்கிறது.

பெண்கள் அடிக்கடி சிறுநீர் கழிக்காமல் அடக்கி வைப்பார்கள். இவ்வாறு அடக்கி வைப்பதால் அதில் நுண்ணுயிரிகளின் உற்பத்தி அதிகமாகி நோய் உண்டாகும் வாய்ப்பு அதிகரிக்கும். இவர்களுக்கு சிறுநீர்த்தாரைத்தொற்று வரும். வெங்காயத்தை உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொண்டால் உடலில் உள்ள கழிவுப்பொருட்களை கரைத்து, அழற்சியைக் குறைத்து, சிறுநீர்த் தொற்றையும் குணமாக்கும்.

யூரிக் அமிலம் அதிகமாக சிறுநீர்ப்பையில் சேர்ந்தால் கற்கள் தோன்றும் என்பது உங்களுக்குத் தெரியும். இத்தொல்லை இருந்தால் நிறைய வெங்காயம் சாப்பிடுங்கள். கற்கள் கரைந்து ஓடும். வெங்காயத்தையும், கடுகு எண்ணெயையும் சேர்த்து மூட்டு வலி உள்ள இடத்தில் தடவினால் வலி குறைந்துவிடும்.சீதோஷ்ண நிலை மாறும்போது அடிக்கடி சளிப்பிடிக்கும். இருமல் வரும். நுரையீரல் அழற்சி, மூக்கு எரிச்சல் போன்றவையும் இருக்கும். இதைத்தவிர்க்க சுலபமான வழி, வெங்காயச்சாற்றில் தேன் கலந்து சாப்பிடுவதுதான். உடல் எடை அதிகமாக இருந்தாலும்கூட அதை வெங்காயம் குறைத்துவிடும்.

புற்றுநோயைத் தடுக்கும் அற்புத மருந்துபொருள் வெங்காயம். புகைத்தல், காற்று மாசு, மனஇறுக்கம் போன்றவைகளால் ஏற்படும் செல் இறப்புகளை, செல் சிதைவுகளை இது சீர்ப்படுத்தி விடுகிறது. மாரடைப்பு, பக்கவாதம் போன்றவற்றையும் நீக்குகிறது. முகச்சுருக்கம், சருமம் தொங்குதல் போன்றவற்றை வெங்காயத்திலுள்ள புரோட்டீன்கள் தவிர்க்கின்றன. வெயிலில் அதிக நேரம் இருப்பதால் ஏற்படும் வெப்பத்தாக்கிலிருந்து தப்ப விரும்பினால் வெங்காயத்தை உள்ளங்கை, கன்னங்கள், வயிறு, குதிகால் போன்ற இடங்களில் தடவிக்கொள்ளலாம்.

பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம் என இரண்டு வகை இருந்தாலும் இரண்டுமே ஏறக்குறைய ஒரே பலன் தருபவைதான். ஆனால் வைத்தியத்தில் சின்ன வெங்காயத்தை அதிகமாக பயன்படுத்துகிறார்கள். இதற்கு மெடிசின் வெங்காயம் என்றே பெயர். வெங்காயத்தை சாப்பிடுங்கள். நோய் இல்லாமல் வாழுங்கள்.

தொகுப்பு - எஸ்.மேரி ரஞ்சிதம், சிவகங்கை.

Tags :
× RELATED லூஃபா குளியல் டிப்ஸ்!