எதிர்க்கட்சிகள் எவ்வளவு சேற்றை வாரி இறைத்தாலும் அதில் தாமரை மலரும் : பிரதமர் மோடி பாய்ச்சல்!!

டெல்லி : எதிர்க்கட்சிகள் எவ்வளவு சேற்றை வாரி இறைத்தாலும் அதில் தாமரை மலரும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பதில் அளித்து மாநிலங்களவையில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, எதிர்கட்சிகளைச் சேர்ந்த மாநிலங்களவை எம்பிக்களின் செயல்பாடுகள் தேச நலனை பாதிக்கும் வகையில் உள்ளது.நாட்டு மக்கள் மாநிலங்களவை உரையை உற்று நோக்குகின்றனர் என்பதை அமளியில் ஈடுபடும் எம்.பி.க்கள் மறந்து விடக்கூடாது. நீங்கள் எங்கள் மீது சேற்றை வீசினாலும் அதில் தாமரை மலர்வதை யாராலும் தடுக்க முடியாது.

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் எந்த ஒரு தேசிய பிரச்னைகளுக்கும் தீர்வு காணப்படவில்லை.நாட்டின் நீண்ட கால பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதில் பாஜக அரசு முயல்வதோடு, அதில் உறுதியாக உள்ளது.காங்கிரஸ் கட்சியை போல் ஓடி ஒழியவில்லை. சுதந்திர இந்தியாவில், தங்கள் ஆட்சியில் 60 ஆண்டுகாலத்தை காங்கிரஸ் கட்சி வீணடித்துவிட்டது. காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில், நாடு எந்தஒரு சவாலையும் சமாளிக்க முடியாது என்பதை கடந்த காலம் உணர்த்தியுள்ளது.காங்கிரஸ் கட்சியை மக்கள் நிராகரித்து வருகின்றனர் என்பதை ஒவ்வொரு தேர்தல் முடிவுகளும் சொல்கின்றன.

பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு 11 கோடி இல்லங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. முந்தைய ஆட்சி காலத்தில் 3 கோடி மக்களுக்கு மட்டுமே குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. கர்நாடக மாநிலத்தில் 1.70 கோடி ஜன்தன் வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. அரசு நலத்திட்டங்களின் பயன் ஜன்தன் வங்கி கணக்குகள் மூலம் மக்களுக்கு நேரடியாக சென்று சேர்கிறது. ஜன்தன் வங்கிக் கணக்குகள் மூலம் ஊழல் தடுக்கப்பட்டுள்ளது. பாஜக ஆட்சிக்கு வந்த பின் சமையல் எரிவாயு இணைப்புகள் 14 கோடியில் இருந்து கோடியாக உயர்வு,என்றார். முன்னதாக பிரதமர் மோடி உரையாற்ற தொடங்கிய போது, அதானி விவகாரம் குறித்து விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக் குழுவை அமைக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டனர். அதானியும் மோடியும் நண்பர்கள் என்று கூறி அவையின் மையப் பகுதியில் கூடி எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கம் இட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.     

Related Stories: