சென்னை சவுகார்பேட்டையில் குடோனில் பதிக்கிவைக்கப்பட்ட 11.5 டன் ரேசன் அரிசி பறிமுதல்: 4 பேர் கைது

சென்னை: சென்னை சவுகார்பேட்டையில் குடோனில் பதிக்கிவைக்கப்பட்ட 11.5 டன் ரேசன் அரசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை கூடுதல் இயக்குநர் அருண் உத்தரவின் பேரில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை எஸ். பி. கீதா தலைமையிலான போலீசார் சோதனை நடத்தினர்.

ரேசன் அரிசியை பதுக்கி வைத்திருந்த ஜெயசிவா, முத்து, விஸ்வநாதன், ரகமதுல்லா, சரத்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 4 போரையும் சிவில் சப்ளை செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். ஒரு லாரி மற்றும் 2 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து சிவில் சப்ளை சிஐடி போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை மற்றும் புறநகரில் ரேசன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி ஆந்திராவுக்கு கடத்தி அதிக விளக்கு விற்றது அம்பலமாகியுள்ளது.

Related Stories: