நாட்டிலேயே முதன்முறையாக குழந்தை பெற்ற திருநம்பி.. மாற்றுப் பாலின தம்பதிக்கு குவியும் பாராட்டு!!

திருவனந்தபுரம் : கேரளாவைச் சேர்ந்த மாற்றுப்பாலின காதலர்களான சஹத் - ஜியா தம்பதிக்கு குழந்தை பிறந்துள்ளது. இதன் மூலம் நாட்டிலேயே முதன்முறையாக திருநம்பி ஒருவர் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உம்மலத்தூர் பகுதியைச் சேர்ந்த சஹத் பாசில், பெண்ணாக பிறந்து ஆணாக மாறிய திருநம்பி. ஐவரும் ஆணாக பிறந்து பெண்ணாக மாறிய திருநங்கை ஜியா பாவல் என்பவரும் கடந்த 3 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். குழந்தை மீதான ஆசையால் முதலில் ஒரு குழந்தையை தத்தெடுக்க விரும்பிய இவர்கள் அதில் உள்ள சில சட்ட சிக்கல்களால் தாங்களே குழந்தை பெற்றுக் கொள்ள முடிவெடுத்து மருத்துவரை அணுகி உள்ளனர்.

பாலின மாற்று அறுவை சிகிச்சையில் சஹத்தின் மார்பகங்கள் அகற்றப்பட்ட போதிலும் கருப்பை உள்ளிட்ட உறுப்புக்கள் அகற்றப்படாமல் இருந்ததால் அவரால் கர்பபம் அடைய முடியும் என மருத்துவர்கள் தெரிவித்தன. இதையடுத்து ஜியாவின் விந்தணுவை பெற்று அதை சோதனை கூடத்தில் கருவாக வளர வைத்து சஹத்தின் கருப்பைக்குள் செலுத்தப்பட்டது. இந்த நிலையில் சஹத் அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை பெற்று எடுத்தார்.

Related Stories: