பனிப்பாறை ஏரிகள் வெடிப்பினால் 1.5 கோடி பேருக்கு ஆபத்து: விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்

புதுடெல்லி: பனிப்பாறை ஏரிகள் வெடிப்பு ஏற்பட்டால் இந்தியா, பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த ஒரு கோடியே 50 லட்சம் மக்கள் ஆபத்தில் சிக்கிக் கொள்வார்கள் என விஞ்ஞானிகள் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக, இங்கிலாந்து நாட்டின் நியூ காஸ்ட்சில் பல்லைக்கழகத்தை சேர்ந்த சர்வதேச விஞ்ஞானிகள் குழு ஆராய்ச்சி நடத்தி உள்ளனர். இந்த ஆய்வின் முடிவுகளை நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. அதில், உலகெங்கிலும் உள்ள பனிப்பாறைகள் ஆபத்தான விகிதத்தில் உருகி வருகிறது.

அதிக பனியால் பனிப் படிமங்கள் படிந்து பாறைகளாகி விடுகின்றன. வெப்பம் அதிகமாகும் நேரங்களில் அந்த பாறைகள் உருகி ஏற்கனவே பனிப்பாறை இருந்த இடத்தில் வெற்றிடத்தை உருவாக்கும். அந்த வெற்றிடத்தில் பனிப்பாறைகள் உருகி ஓடி வரும் நீர் தேங்கி ஓர் ஏரியை உருவாக்கி விடுகிறது. பெரும்பாலான இத்தகைய பனிப்பாறை ஏரிகளுக்கு கரையாகவே பனிப்பாறைகள்தாம் இருக்கும்.

இயற்கையான அணை போல் பனிப்பாறைகள்  நீரை தேக்கி வைக்கும்.உலகளவில் வெப்பம் அதிகரித்துக் கொண்டிருப்பதை கடந்த சில ஆண்டுகளாக உலகின் பல்வேறு ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர். உலகளவில் பனிப்பாறைகளில் வெடிப்பு ஏற்பட்டு இந்தியா, பாகிஸ்தான், பெரு மற்றும் சீனா போன்ற நாடுகளில் உள்ள 1.5 கோடி பேருக்கு பாதிப்பு ஏற்படும்.  இந்தியாவில் பனிப்பாறை ஏரிகள் உடைந்து 30 லட்சம் பேர் பாதிக்கப்படக்கூடும்  என்ற அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: