ஆன்லைன் சூதாட்டத்தால் கடன் மேலும் ஒரு தொழிலாளி தற்கொலை

ஆத்தூர்: ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த தொழிலாளி, தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.சேலம் மாவட்டம், ஆத்தூர் அடுத்த உடையார்பாளையத்தைச் சேர்ந்தவர் பிரபு(30). வெல்டிங் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி சசிகலா, 2 மகள்கள், ஒரு மகனும் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்டு வந்த பிரபு, அதற்காக வங்கிகள் மற்றும் தனியார் பைனான்சில் கடன் பெற்றுள்ளார்.

ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்த நிலையில், வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால் கடன்காரர்களின் தொல்லை அதிகமானது.  இந்நிலையில், நேற்று மதியம் கடைக்கு சென்ற சசிகலா, வீடு திரும்பிய போது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து சென்ற போது, மின்விசிறியில் பிரபு சடலமாக தொங்கியதை கண்டு கதறினார்.

இதுகுறித்து ஆத்தூர் டவுன் போலீசார் வழக்கு பதிந்து நடத்திய முதல் கட்ட விசாரணையில், ஆன்லைன் விளையாட்டில் ஏராளமான பணத்தை இழந்து, கடன் தொல்லையால் அவதிப்பட்ட பிரபு, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

Related Stories: