வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் கட்டணம் வசூல் இல்லை

சென்னை: தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனத்தின் பொது மேலாளர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் சுங்கச்சவாடிகள் அமைக்கப்பட்டு சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படும் என்ற தகவல் தவறானது. தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் வண்டலூரில் இருந்து மீஞ்சூர் வரையிலான வெளிவட்டசாலையில் சுங்கக்கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்கிற செய்தியும் தவறானது.

மாறாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சுங்கக்கட்டணங்கள் நிர்ணய சட்டத்தின்படி 2022ம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையில் குறிப்பிட்டுள்ள 4 சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்பட வேண்டிய கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு வசூலிக்கப்பட்டு வருகிறது. சென்னை வெளிவட்டச் சாலையின் இருபுறமும் அமைக்கப்பட்டுள்ள சேவைவழிச்சாலையில் செல்லும் வாகனங்களுக்கு சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படவில்லை.

Related Stories: