போலீஸ்காரரை தாக்கிய 4 பேர் சிறையில் அடைப்பு

ஆலந்தூர்: ஆலந்தூர், கண்ணன் காலனி, 5வது தெருவை சேர்ந்தவர் விஜயன் (32), புதுப்பேட்டை ஆயுதப்படை காவலர். நேற்று முன்தினம் இரவு மைத்துனர் வாசுதேவனுடன் பழவந்தாங்கல் மார்க்கெட்டுக்கு சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது, அஜ்மல் என்பவர் தன்னை ஆலந்தூர் கண்ணன் காலனி மைதானத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குவதாக கூறியதால் விஜயன் அங்கு சென்றார்.

அப்போது, விஜயன், வாசுவேதன் ஆகியோரை ஒரு கும்பல் தாக்கிவிட்டு தப்பியது. படுகாயம் அடைந்த விஜயன் ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பரங்கிமலை போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து காவலரை தாக்கிய அஜித், வினோத், விவேக், ரவிக்குமார் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

Related Stories: