குடிநீர் வாரிய பணிமனை அலுவலகங்கள் இடமாற்றம்

சென்னை:  சென்னை குடிநீர் வாரியம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம், பகுதி அலுவலகம்-5க்கு (ராயபுரம்) உட்பட்ட பணிமனை அலுவலகம்-54, 55 மற்றும் 56 ஆகிய பணிமனை அலுவலகங்கள் வரும் 10ம்தேதி புதிய முகவரியில் செயல்படும். அதன்படி, எண்.6, அம்மன் கோயில் 1வது சந்து, ஜார்ஜ் டவுன், சென்னை - 79 என்ற முகவரியில் செயல்பட்டு வந்த பணிமனை எண்-54, தற்போது எண்.333, வால்டாக்ஸ் சாலை, சென்னை -79 என்ற முகவரிக்கும், எண்.121, ஏழுகிணறு தெரு, சென்னை -1 என்ற முகவரியில் செயல்பட்டு வந்த பணிமனை எண்.55, தற்போது எண்.48, கோவிந்தப்பா தெரு, சென்னை -79 என்ற முகவரியிலும்  எண்.14, கெயில்ஸ் தெரு, முத்தியால்பேட்டை, சென்னை-1 என்ற முகவரியில் செயல்பட்டு வந்த பணிமனை எண் 56, தற்போது    எண்.48, கோவிந்தப்பா தெரு, சென்னை -79 என்ற முகவரிக்கும் மாற்றப்பட்டுள்ளது.     

 

எனவே, பொதுமக்கள் குடிநீர் மற்றும் கழிவுநீர் சம்பந்தப்பட்ட புகார்கள் மற்றும் குடிநீர் வரி, கட்டணம் செலுத்தவும் மேற்கண்ட புதிய முகவரியில் தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பகுதிப் பொறியாளரை 8144930905 என்ற எண்ணிலும், துணை பகுதிப் பொறியாளரை 8144930213 என்ற எண்ணிலும், உதவிப் பொறியாளரை 8144930054 என்ற எண்ணிலும், இளநிலைப் பொறியாளரை 8144930055 என்ற எண்ணிலும், உதவிப் பொறியாளரை 8144930056 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

Related Stories: