வைரமடையிலிருந்து கரூர் வரை ரூ.137 கோடியில் 4 வழிச்சாலை

சென்னை: வைரமடையிலிருந்து கரூர் வரை ரூ.137 கோடியில் 4 வழிச்சாலையாக மாற்றப்படுவதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கோயம்புத்தூர் -சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையானது கரூர் மாவட்டத்தில் மிகவும் முக்கியமான சாலையாகும். இச்சாலையில் கரூர் மாவட்டத்தில் உள்ள பேருந்து மற்றும் கனரக சரக்கு வாகன கட்டுமான தொழிற்சாலைகள், ஜவுளி தொழிற்சாலைகள், கல் குவாரி போன்றவைகள் அமைந்துள்ளன.  

மேலும் இச்சாலையானது உள்ளீட்டு மூலப்பொருட்களை தொழிற்சாலைகளுக்கு கொண்டு செல்வதற்கும் பயன்படும் முக்கிய சாலையாகும்.  கரூர், திருச்சி, தஞ்சாவூர், நாகைப்பட்டினம், சென்னை, கோயம்புத்தூர், ஊட்டி ஆகிய முக்கிய மாவட்டங்களை இணைக்கும் சாலையாக அமைந்துள்ளது. எனவே வைரமடையிலிருந்து கரூர் வரை  இருவழிச்சாலையில் இருந்து 4 வழிச்சாலையாக அகலப்படுத்தப்படுகிறது.  இதற்கு ரூ.137.25 கோடி மதிப்பிற்கு ஒன்றிய அரசிடம் நிர்வாக ஒப்புதல் மற்றும் தொழில் நுட்ப அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.   

Related Stories: