கடலூரில் ஒரே குடுபத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை

கடலூர்: கடலூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் குடும்பப் பிரச்சனையால் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கடலூர் செல்லங்குப்பம் வெள்ளிபுள்ளையார் கோவில் தெருவில் வசித்து வருபவர் பிரகாஷ் இவரது மனைவி தமிழரசி, இவர்களுக்கு 8 மாத கைக்குழந்தை ஹாசினி என்ற கைகுழந்தையும் உள்ளது. இந்நிலையில் தமிழரசியின் அக்காவன தனலட்சுமி சர்குரு என்பவரை மனத்துள்ளார்.

அவர்க்கும் தனலட்சுமிக்கும் பிரச்சனை ஏற்பட்டு தனது அக்கவன தமிழரசி வீட்டிற்கு இன்று காலை வந்து தங்கியுள்ளார். இதனை அறிந்த தனலட்சுமியின் கணவர் சர்குரு தனது மனைவியிடம் வீட்டில் வந்து சண்டை ஏற்படுத்தியுள்ளார். அப்பொழுது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு குடும்பப் பிரச்சனை ஆகியுள்ளது. இதுநாள் ஆத்திரம் அடைந்த சர்குரு அங்கு இருந்த தமிழரசி, தனலட்சுமி தனது 4 மாத குழந்தை மற்றும் தமிழரசியின் 8 மாத குழந்தையின் மீது டீசல் ஊற்றி தீ வைத்துள்ளார்.

இதில் 4 பேர் உடல் கருகி பலியாகியுள்ளனர். இதில் சர்குரு, தமிழரசி மற்றும் இரண்டு கைக்குழந்தைகள் பலியாகியுள்ளனர். இதில் தனலட்சுமி மட்டும் தீ காயத்துடன் தற்போது கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தனது மனைவியின் அக்கா குடும்பத்தை தற்போது உயிரோடு எரித்து கொலை செய்துள்ளார் என்று அருகில் உள்ள பொதுமக்கள் கூறுகிறார்கள். குடும்பப் பிரச்சனையில் தனது மனைவியிடம் சண்டை போட்டுகொண்டு அக்கா வீட்டிற்கு வந்த சர்குரு தனது மனைவியையும், அக்காவையும், மற்றும் அவரது குழந்தை, மற்றும் அக்கா குழந்தைகளையும் தீ வைத்து கொளுத்தியுள்ளார்.

இதனால் தற்பொழுது செல்லங்குப்பம் பகுதியில் ஒரு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இரண்டு கைக்குழந்தைகள் தீயில் கருகி எரிந்தது அனைவரின் மனதை உருகிய சம்பவம் என்பது கடலூர் பகுதியில் தற்போது ஏற்பட்டுள்ளது. தனது குடும்பப் பிரச்சனையில் தனது மனைவியின் அக்கா குடும்பத்தையும் சேர்ந்து  கொளுத்திய சர்குரு மீது பொதுமக்கள் ஆத்திரம் அடைந்துள்ளனர்.

Related Stories: