சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்யும்போது முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்-மாணவிகளுக்கு சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தல்

வேலூர் :  சமூக வலைதளங்களில் புகைபடங்களை பதிவேற்றம் செய்யும்போது முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மாணவிகளுக்கு சைபர் கிரைம் போலீசார் அறிவுரை வழங்கினார்.

வேலூர் மாவட்டத்தில் இணையவழி சேவையை பாதுகாப்பாக பயன்படுத்துவது ெதாடர்பான விழிப்புணர்வு வாரம் 6ம் தேதி முதல் வரும் 10ம் தேதி வரை கடைபிடிக்க எஸ்பி ராஜேஷ்கண்ணன் உத்தரவிட்டார். இதையொட்டி மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு சைபர் கிரைம் போலீசார் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, வேலூர் சாய்நாதபுரத்தில் உள்ள டிகேஎம் மகளிர் கல்லூரியில் பாகாயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் சைபர் கிரைம் போலீசார் சசிகலா, சுமதி ஆகியோர் கலந்துகொண்டு பேசியதாவது: இன்றைய தகவல் தொழில்நுட்ப காலத்தில் அனைவரிடமும் செல்போன் உள்ளது. இணையதளம் மூலமாக பணப்பரிமாற்றம், தகவல் சேகரிப்பு போன்றவற்றுக்கு செல்போனை பயன்படுத்துகிறோம்.

சமூக வலைதளங்களில் பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்தும்போது மற்றும் மிகுந்த முன்னெச்சரிக்கையோடு இருக்க வேண்டும். குறிப்பாக சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பதிவேற்றும்போது சில கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும். வாட்ஸ் அப்பில் புதிய நபர்கள் யாரும் புகைப்படங்களை பார்க்காதவாறு ‘செட்டிங்’ செய்ய வேண்டும்.

 பாஸ்வேர்டுகளை பயன்படுத்தும்போது ஒரு ஆங்கில எழுத்து, ஸ்பெஷல் குறியீடு (உதாரணத்திற்கு@,#) போன்றவற்றையும் இணைத்து பயன்படுத்தலாம். 8 இலக்க பாஸ்வேர்ட் பயன்படுத்தும்போது உங்களது சமூக வலைதள பக்கங்களை யாரும் அவ்வளவு எளிதில் ‘ஹேக்’ செய்துவிட முடியாது. அதேபோல் லோன் ஆப் லிங்க் உள்ளிட்டவற்றை தவிர்க்க வேண்டும். செல்போனில் ஆப்களை அவ்வப்ேபாது அப்டேட் செய்வதன் மூலம் நமது விவரங்கள் மற்றும் தகவல்களை மற்றவர்கள் திருடுவதை தவிர்க்க முடியும். இணையதளங்களை பயன்படுத்தும்போது பாதுகாப்பு முக்கியம்.

இணையதளம் மூலமாக ஆபாச மெசேஜ், படங்கள் வந்தால் உடனடியாக சைபர் கிரைம் போலீசில் புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர்கள் கூறினர். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாணவிகள் பலர் கலந்துகொண்டனர். இதைதொடர்ந்து, வேலூர் முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரி, அரசு பொறியியல கல்லூரியில் இணையவழி சேவையை பாதுகாப்பாக பயன்படுத்துவது குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Related Stories: