காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்-காதலனுக்காக மதம் மாறிய காதலி

திண்டிவனம் : திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர்.செங்கல்பட்டு பெரிய நத்தம் நகர் பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் மகள் திவ்யா(21). பி,காம் படித்த இவர், சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இதேபோல் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் திருவள்ளுவர் நகர் பகுதியைச் சேர்ந்த முகமது இஸ்மாயில் மகன் முகமது அசைன்(22). அதே கம்பெனியில் பணிபுரிந்து வந்துள்ளார். நாளடைவில் இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர். நட்பு காதலாக மாறி கடந்த இரண்டு ஆண்டுகளாக உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதல் பெற்றோருக்கு தெரிந்ததால், வெவ்வேறு மதத்தினர் என்பதற்காக எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே கடந்த 5ம் தேதி காலை திவ்யா வீட்டிலிருந்து வெளியேறி, திண்டிவனத்தில் உள்ள காதலன் முகமது அசைன் என்பவருடன் சென்றுள்ளார். பின்னர் இருவரும் அன்று சென்னை கோவளம் பகுதியில் உள்ள தர்காவில் திவ்யா முஸ்லிமாக மதமாற்றம் செய்யப்பட்டு, முஸ்லிம் முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். பின்னர் நேற்று திண்டிவனம் அனைத்து

மகளிர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை செய்த பின், காதலன் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

Related Stories: