வாரன்ட் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும்-எஸ்.பி. அறிவுரை

நாகர்கோவில் :  குமரி மாவட்டத்தில் வாரன்ட் குற்றவாளிகளை கைது செய்வதில் போலீசார் தீவிரம் காட்ட வேண்டும் என்று எஸ்.பி. ஹரிகிரன் பிரசாத் கூறினார்.

குமரி மாவட்ட குற்ற தடுப்பு ஆலோசனை கூட்டம், நாகர்கோவிலில் உள்ள எஸ்.பி. அலுவலகத்தில் நேற்று காலை நடைபெற்றது. எஸ்.பி. ஹரிகிரன் பிரசாத் தலைமை வகித்தார். இதில் ஏடிஎஸ்பி ஈஸ்வரன் மற்றும் டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.க்கள் கலந்து ெகாண்டனர்.

அரசு வக்கீல்கள் மதியழகன், லீனஸ்ராஜ், அரசு மருத்துவக்கல்லூரி டாக்டர்கள், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்களும் பங்கேற்றனர். இதில் கடந்த மாதம் நடந்த குற்ற சம்பவங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் நிலை, காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள புகார் மனுக்கள் தொடர்பாக எஸ்.பி. ஆலோசனை நடத்தினார்.

அப்போது பேசிய அவர், குமரி மாவட்டத்தில் திருட்டு சம்பவங்கள் மற்றும் கஞ்சா, போதை பொருட்கள் விற்பனையை தடுக்கும் வகையில் காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். ரோந்து பணியில் போலீசார் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். வாரன்ட் குற்றவாளிகள் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

இந்த கூட்டத்தில், நீதிமன்ற நடைமுறைகளில் சிறப்பாக செயல்பட்டு கொலை குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தருவதில் சிறந்த முறையில் பணியாற்றிய களியக்காவிளை சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் எல்டர் லியோ மனோகர், பெண் தலைமை காவலர் சுஜிதாகுமாரி, தலைமை காவலர் சசி ஆகியோருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார். கடந்த ஜனவரி மாதத்தில் குற்ற வழக்குகளில் சிறந்த முறையில் குற்றபத்திரிகை தாக்கல் செய்த பூதப்பாண்டி இன்ஸ்பெக்டர் முத்துராஜ் நித்தரவிளை இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ், மார்த்தாண்டம் எஸ்.ஐ. வினிஷ் பாபு ஆகியோருக்கும், நாகர்கோவில் மகளிர் போலீஸ் நிலைய வழக்கில் குற்றவாளியை கண்டுபிடித்த வடசேரி தனிப்பிரிவு ஏட்டு ஞான பிலிப், மாவட்ட ஆயுதப்படையில் சிறந்த முறையில் பணியாற்றியதற்காக பெண் காவலர்கள்  ஷாலினா மற்றும் தன்யா ஆகியோருக்கும், நீதிமன்ற நடைமுறைகளில் சிறந்த முறையில் பணியாற்றிய கன்னியாகுமரி ஏட்டு ஞானசேகர், சிசிடிஎன்எஸ் கணினி பிரிவில் சிறந்த முறையில் பணியாற்றிய மார்த்தாண்டம் காவல் நிலைய பெண் போலீஸ் ஜாஸ்மின் ஷீபா, இரணியல் காவல் நிலைய பெண் தலைமை காவலர் மேரி ஜாயிஸ் ஆகியோருக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

கைரேகை பிரிவில் சிறந்த முறையில் குற்றவாளிகளின் கைரேகைகளை கண்டுபிடித்த கைரேகை பிரிவு ஏடிஎஸ்.பி. ரத்தின சேகர் மற்றும் சப் இன்ஸ்பெக்டர்கள் வினிதா, அமலா, சித்திரை செல்வன், ஜவஹர்லால்  ஆகியோருக்கும் எஸ்.பி. பாராட்டு சான்றிதழ் வழங்கினார். குற்றவழக்குகளில் ஈடுபட்டு நீதிமன்றங்களில் ஆஜராகாமல் இருந்த 46 பேருக்கு பிடியாணை நிறைவேற்றிய தக்கலை எஸ்.எஸ்.ஐ. மரிய அற்புதம், முதல் நிலை காவலர் சைரஸ் ஆகியோருக்கும், கடத்தப்பட்ட குழந்தையை 2 மணி நேரத்தில் மீட்டு குற்றவாளியை கைது செய்த தக்கலை இன்ஸ்பெக்டர் நெப்போலியன், எஸ்.ஐ. சத்தியசோபன், தக்கலை துணை போலீஸ் சரக தனிப்பிரிவு எஸ்.ஐ. எபின், தனிப்பிரிவு ஏட்டு ஜோஸ் ஆகியோருக்கும் எஸ்.பி. ஹரிகிரன் பிரசாத் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

ஆயுள் தண்டனை பெற்று 8 வருடமாக தலைமறைவாக இருந்த குற்றவாளியை  கண்டுபிடித்த மார்த்தாண்டம் காவல் நிலைய ஏட்டுகள் ராஜேஷ், அல்போன்ஸ், சுந்தர், சுரேஷ்குமார் ஆகியோருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.  மாவட்ட எஸ்.பி. சிறந்த முறையில் பணியாற்றி றேராஜ், உங்களில் ஒருவன் என்ற விழிப்புணர்வு குறும்படத்தை காவல் துறையோடு இணைந்து எடுக்க உதவி செய்த குழுவினருக்கும் எஸ்.பி. பரிசுகளை வழங்கினார்.

Related Stories: