மக்களவையில் பாரிவேந்தர் எழுப்பிய கேள்விகளுக்கு ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதில்

டெல்லி: மக்களவையில் பாரிவேந்தர் எழுப்பிய கேள்விகளுக்கு ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதில் அளித்து வருகிறார். ஒன்றிய பட்ஜெட்டில் தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ.6,080 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் பெரம்பலூர், துறையூர் வழியாக அரியலூர்-நாமக்கல் ரயில்வே பாதை அமைப்பதற்கு நிதி ஒதுக்கப்படவில்லை. பெரம்பலுர் வழியாக ரயில்பாதை அமைப்பது 50 ஆண்டுகால கனவு என்றும் திட்டத்தை செயல்படுத்த நிதி ஒதுக்கீடு செய்ய ஒன்றிய அரசு முன்வருமா என்று மக்களவையில் பாரிவேந்தர் எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார்.

அதன்பிறகு  பாரிவேந்தர் எம்.பி கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்  பதில் அளித்து வருகிறார். பாரிவேந்தரின் கோரிக்கை குறித்து நன்றாக தெரியும் என்று அமைச்சர் கூறியுள்ளார். கோரிக்கை தொடர்பாக பாரிவேந்தர் என்னை நேரில் சந்தித்து பேசலாம் என்று அஸ்வினி வைஷ்னவ் கூறியுள்ளார். திட்டங்களை செயல்படுத்த ஒன்றிய அரசு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என்று ஒன்றிய அமைச்சர்  அஸ்வினி வைஷ்னவ் தெரிவித்துள்ளார்.

Related Stories: