இடிந்தகரை: கடலில் நாட்டுப்படகு, விசைப்படகு மீனவர்கள் மோதலில் குமரி விசைப்படகு மீனவர்கள் மீது நாட்டுவெடிகுண்டு தாக்குதல்

கன்னியாகுமரி: கன்னியாகுமரியை சேர்ந்த விசை படகுகள் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசியதாக நெல்லை இடிந்தகரையை சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் 37 பேர் மீது கடலோர காவல்குழும போலீசார் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர். நெல்லை அருகே 8 நாட்டிகல் மைல் உட்பட்ட கடல் பகுதியில் இடிந்தகரை நாட்டுப்படகு மீனவர்களும் அங்கு மீன் பிடிக்க வந்த கன்னியாகுமரி விசை படகு மீனவர்களும் மோதி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. விசை படகுகள் மீது நாட்டுப்படகு மீனவர்கள் நாட்டு வெடிகுண்டுகளை வீசினர் என்பது குற்றச்சாட்டு. இந்த வீடியோ இன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விசை படகு மீனவர்கள் கடற்கரையை ஒட்டிய பகுதியில் மீன் பிடிக்க கூடாது என்பதும் 12 கடல் மைலுக்கு அப்பால் சென்றுதான் மீன்பிடிக்க வேண்டும் என்பது விதியாகும். ஆனால், 5 விசை படகுகளில் வந்து கடற்கரையோரம் மீன்பிடித்த கன்னியாகுமரி மீனவர்களை உடனடியாக வெளியேறும் படி இடிந்தகரை மீனவர்கள் எச்சரித்தனர். ஆனால், அவர்கள் செல்லாததால் 12 வள்ளங்களில் வந்த இடிந்தகரை மீனவர்கள், குமரி மீனவர்கள் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசியதாக கூறப்படுகிறது. ஆனால், நாங்கள் பட்டாசுகளை தான் வீசியதாக நாட்டுப்படகு மீனவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். கடற்கரையோரம் வந்து இழுவை வலை மூலம் மீன் பிடிப்பதால் தங்களுக்கான மீன் வளம் குறைவதோடு, தங்களின் வலைகளும் சேதமாவதாக நாட்டுப்படகு மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனாலேயே, தாங்கள் தாக்குதல் நடத்தியதாக இடிந்தகரை மீனவர்கள் கூறுகின்றனர். 

Related Stories: