தேனி: பெரியகுளம் சுற்றுவட்டாரத்தில் பெய்த திடீர் மழை காரணமாக மாம்பிஞ்சுகள் உருவாகும் தருவாயில் இருந்த பூக்கள் அனைத்தும் அழுகி வீனானது. தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கும்பக்கரை, செலும்பு, முருகமலை, சோத்துப்பாறை, லட்சுமி புரம் ஆகிய பகுதிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் மாந்தோப்புகள் உள்ளன. இப்பகுதியில் அல்போன்சா, பங்கனபள்ளி, காலேபாடி, இமாம்பசந்த், செந்தூரா,காசா உள்பட பல்வேறு மார்க்கங்களை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர்.