கர்நாடகாவிலிருந்து குமரிக்கு சுற்றுலா வந்த பேருந்து குமரி அரசு மருத்துவமனை நுழைவாயிலில் மோதி விபத்து

கன்னியாகுமரி: கர்நாடகாவிலிருந்து கன்னியாகுமரிக்கு 50-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளுடன் வந்த பேருந்து ஒன்று  குமரி அரசு மருத்துவமனை மீது மோதி விபத்திற்குள்ளானது. கர்நாடகாவில் இருந்து சுமார் 50-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு பேருந்து ஒன்று பழனி, மதுரை, நெல்லை வழியாக கன்னியாகுமரிக்கு வந்தது. கன்னியாகுமரிக்கு வந்த பேருந்து கன்னியாகுமரி அரசு மருத்துவமனை அருகே அமைந்துள்ள நுழைவாயிலை கடந்து போக முயன்றுள்ளது.

அப்போது தாங்கும் விடுதியில் சுற்றுலா பயணிகளை தங்க வைக்க செல்லும் போதே கன்னியாகுமரி-நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள அலங்கார நுழைவாயில் பேருந்தின் மேல் பகுதி இடித்து விபத்து ஏற்பட்டது. விபத்தால் அலங்கார வளைவின் மேல்பகுதி இடிந்து சேதமடைந்து பேருந்து மீது விழுந்தது. இதனால் பேருந்தில் இருந்த 50-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் அலறியடித்து கொண்டு கீழே இறங்கினர். தகவலறிந்து கன்னியாகுமரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories: