திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ரூ.1.38 கோடி ரொக்கம், 3 கிலோ தங்கம், 4 கிலோ வெள்ளி.. பக்தர்கள் காணிக்கை...

திருச்சி: சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ரூ.1.38 லட்சம் ரொக்கம், 3 கிலோ தங்கம், 4 கிலோ 130 கிராம் வெள்ளியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். சக்தி தளங்களில் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோயில். இங்கு பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் லட்ச கணக்கான பக்தர்கள் வருகை தந்து வழிபாடு செய்து விட்டு உண்டியல்களில் காணிக்கை செலுத்துகின்றனர். திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. நிரந்த உண்டியல்களோடு, தைப்பூசத்திற்காக அமைக்கப்பட்ட தற்காலிக உண்டியல் எண்ணப்பட்டது.

பக்தர்களின் காணிக்கைகளால் நிறைந்த 18 உண்டியல்களை கோயில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் கோயில் ஊழியர்கள் தன்னார்வலர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் எண்ணும் பணியில் ஈடுப்பட்டனர். இதில் சுமார் ரூ.1 கோடியே 38 லட்சம் ரொக்கம், 3 கிலோ 181 கிராம் தங்கம், 4 கிலோ 130 கிராம் வெள்ளி, வெளிநாட்டு பணம் 206, வெளிநாட்டு நாணயங்கள் 551 இருந்ததாக இணை ஆணையர் கல்யாணி தெரிவித்துள்ளார்.   

Related Stories: