தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதி தேர்வு 2-ம் தாளுக்கான கணினி வழித் தேர்வு தொடங்கியது.

சென்னை: ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 2 க்கான கணினி வழித் தேர்வு இன்று நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2022 -ம் ஆண்டிற்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிக்கை 07.03.2022 அன்று வெளியிடப்பட்டது . இணையவழி வாயிலாக விண்ணப்பத்தினை விண்ணப்பதாரர்கள் 14.03.2022 முதல் பதிவேற்றம் செய்திடலாம் என தெரிவிக்கப்பட்டது . மேலும் , விண்ணப்பதாரர் விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்ய 26.04.2022 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது . அதில் தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது . தற்பொழுது ஜனவரி மாதம் 31.01.2023 முதல் பிப்ரவரி மாதம் 12.02.2023 வரை உள்ள தேதிகளில் தாள்- II ற்கு உரிய தேர்வுகள் கணினி வழியில் மட்டுமே நடத்தபடும் என்று தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, 2022 -ம் ஆண்டிற்கான தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு (தாள்- I,II) அறிவிக்கையை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியிட்டது. இதற்கான, விண்ணப்பங்கள்   இணையவழி வாயிலாக பெறப்பட்டது. முதல் தாளுக்கு மட்டும் தேர்வு நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இரண்டாம் தாளுக்கான  தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்திருந்த நிலையில், தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த கணினி வழித் தேர்விற்காக (Computer Based Examination) பயிற்சித் தேர்வு (Practice Test) மேற்கொள்ள விரும்பும் தேர்வர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பயிற்சியினை மேற்கொள்வதற்கு, தேர்வுக்கு 5 நாட்களுக்கு முன்பிருந்து வாய்ப்பு வழங்கப்படும் என்றும், தேர்வு கால அட்டவணை மற்றும் அனுமதிச்சீட்டு (Admit card) வழங்கும் விவரம் ஜனவரி மூன்றாம் வாரத்தில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இன்று பல மாவட்டங்களில் ஆசிரியர் தகுதி தேர்விற்கான 2-ம் தாள் தேர்வு இன்று நடைபெற்று வருகிறது.

Related Stories: