இளம்பெண் திடீர் தற்கொலை

பெரம்பூர்: கொடுங்கையூர் வெங்கடேஸ்வரா நகர் 1வது தெருவை சேர்ந்தவர் யாஸ்மின் (27), குடும்பத்துடன் வசித்து வருகிறார். இன்னும் திருமணம் ஆகவில்லை. பிகாம் வரை படித்துவிட்டு வீட்டில் இருந்தார். இவர் மற்றும் தாய் சுமார் ரூ.17 லட்சம் வரை கடன் வாங்கி இருந்ததாகவும், அதனால் கடன் கொடுத்தவர்கள் கடனை கேட்டு தொல்லை கொடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் யாஸ்மின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், வீட்டின் கதவை உள்பக்கமாக தாழிட்டு ஹாலில் உள்ள கொக்கியில் துப்பட்டாவால் தூக்கு போட்டுக்கொண்டார்.

இரவு 10 மணி அளவில் அவரது நண்பர் சத்யா, யாஸ்மின் வீட்டிற்கு சென்று நீண்ட நேரம் கதவை தட்டியும், கதவு திறக்காததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது, யாஸ்மின் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, இறந்த யாஸ்மின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: