11ம் வகுப்பு மாணவனிடம் விசாரணை பிளஸ் 2 மாணவி கர்ப்பம்

பெரம்பூர்: பெரவள்ளூர் பகுதியில், 12ம் வகுப்பு படிக்கும் மாணவி 3 மாதம் கர்ப்பமடைந்தது குறித்து, 11ம் வகுப்பு மாணவனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெரவள்ளூர் பகுதியை சேர்ந்தவர் 37 வயது பெண். இவர், தனது கணவர் மற்றும் மகள், மகனுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவரது மகள் பெரம்பூரில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில நாட்களாக சிறுமியின் நடத்தையில் சந்தேகமடைந்த தாய், அவரிடம் விசாரித்தபோது, கடந்த 8 மாதமாக சிறுமி பெரவள்ளூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பயிலும் 11ம் வகுப்பு மாணவன் ஒருவனை காதலித்து வந்ததாகவும், இருவரும் கடந்த அக்டோபர் மாதம் 2 முறை உடலுறவில் ஈடுபட்டதாகவும் கூறினார்.

இதனால், அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய், சிறுமியை எழும்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்தபோது, சிறுமி 3 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, மருத்துவமனை நிர்வாகம் பெரவள்ளூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தது. பெரவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அம்பிகா வழக்கு பதிவு செய்து, 11ம் வகுப்பு படிக்கும் 17 வயது மாணவனை அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: