மதுவிற்ற இருவர் கைது

திருவொற்றியூர்: திருவொற்றியூர் கன்னி கோயில் தெரு கடற்கரை பகுதியில், சட்ட விரோதமாக மது விற்பதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. அதன்பேரில், இன்ஸ்பெக்டர் காதர்மீரான் தலைமையில் போலீசார் அப்பகுதிக்கு சென்று சோதனை செய்தனர். அப்போது, அங்கே கள்ளத்தனமாக மதுபாட்டில் விற்பதோடு, போதை தரும் சுண்டக் கஞ்சியும் விற்பது தெரியவந்தது. இதையடுத்து, அங்கு விற்பனை செய்து கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த இம்ரான் (28), துலுக்காணம் தெருவை சேர்ந்த ரமேஷ் (42) ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 20 லிட்டர் சுண்டக்கஞ்சி மற்றும் மதுபாட்டில்களை போலீசார் கைப்பற்றினர்.

Related Stories: