ரூ.2.25 கோடியில் கட்டப்படும் நகர்ப்புற நலவாழ்வு மையத்தை கலெக்டர் ஆய்வு

தாம்பரம்: தாம்பரம் அடுத்த ஆனந்தபுரம் பகுதியில், ரூ.2.25 கோடியில் கட்டப்பட்டு வரும் புதிய நகர்ப்புற நலவாழ்வு மையத்தை கலெக்டர் ராகுல்நாத் ஆய்வு செய்தார்.தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் ரூ.2.25 கோடி மதிப்பீட்டில், 9 புதிதாக நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் கட்டப்பட்டு, விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட உள்ளது. இந்நிலையில், நேற்று 5வது மண்டலம் ஆனந்தபுரம் பகுதியில் கட்டப்பட்டுள்ள நகர்ப்புற நலவாழ்வு மையத்தை செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் நேரில் ஆய்வு செய்தார்.

அப்போது, விரைவில் நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளதால் உரிய மருத்துவர்கள், பணியாளர்களை பொது சுகாதாரத்துறை மூலம் நியமிக்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆய்வின்போது தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா, மேயர் வசந்தகுமாரி, மண்டல குழு தலைவர் எஸ்.இந்திரன், மாநகராட்சி செயற்பொறியாளர் முருகேசன், மாமன்ற உறுப்பினர் ஷகிலா விஜய் ஆனந்த், ஜோதிகுமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Related Stories: