சிறந்த அறிவாற்றல் மாணவியாக 2வது ஆண்டாக இந்திய வம்சாவளி சிறுமி தேர்வு

வாஷிங்டன்: அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் மையம் நடத்திய தேர்வில் உலகின் சிறந்த அறிவாற்றல் மாணவியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த நடாஷா இரண்டாவது முறையாக தேர்வாகியுள்ளார். அமெரிக்காவின் நியூஜெர்சியை சேர்ந்தவர் இந்திய வம்சாவளியை சேர்ந்த நடாஷா (13). இவரது பெற்றோர் சென்னையை சேர்ந்தவர்கள். நடுநிலைப்பள்ளியின் 5வது கிரேட் மாணவியான இவர், கடந்த ஆண்டு ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மையம் நடத்திய திறமைவாய்ந்த இளைஞர்களுக்கான தேர்வில் கலந்து கொண்டார். இதில் இந்திய வம்சாவளி மாணவி நடாஷா வெற்றி பெற்று கவுரவிக்கப்பட்டார்.

இதனை தொடர்ந்து இந்த ஆண்டு பள்ளி மற்றும் கல்லூரிகளில் சேருவதற்கான எஸ்ஏடி மற்றும் ஏசிடி தேர்வில் கலந்து கொண்டார். இந்த தேர்வில் 76 நாடுகளை சேர்ந்த 15300 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் சிறுமி நடாஷா அனைத்து மாணவர்களையும் காட்டிலும் அதிக மதிப்பெண் எடுத்துள்ளார். இதனை தொடர்ந்து உலகின் சிறந்த அறிவாற்றல் மிக்க மாணவியாக தேர்வு செய்யப்பட்டு கவுரவிக்கப்பட்டார்.

Related Stories: