ஐதராபாத்: விஜய் தேவரகொண்டா படத்தை இயக்கும் டைரக்டர் பரசுராம் மீது தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் புகார் கூறியுள்ளார்.விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா நடிப்பில் கீதா கோவிந்தம் படம் திரைக்கு வந்தது. இந்த படத்தை பரசுராம் இயக்கியிருந்தார். கீதா கோவிந்த படத்தை அல்லு அர்ஜுனின் தந்தையும் தயாரிப்பாளருமான அல்லு அரவிந்த் வாங்கி வெளியிட்டார். படம் பெரிய வெற்றி பெற்றது. அப்போது அல்லு அரவிந்த் தயாரிக்கும் படத்தை இயக்கித் தர பரசுராம் ஒப்பந்தமானார். இதற்காக பரசுராமுக்கு பெரும் தொகையை அட்வான்ஸாக அல்லு அரவிந்த் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் சொன்னபடி பரசுராம் படம் இயக்கித் தரவில்லையாம்.