விபத்தில் இறந்த நபர் காரில் 10 கி. மீ. தூரம் இழுத்து செல்லப்பட்ட அவலம்

மதுரா,(உ.பி): டெல்லி சத்சங் விகாரை சேர்ந்த கார் ஓட்டுநர் வீரேந்திர சிங், திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு விட்டு, தனது குடும்ப உறுப்பினர்களுடன் ஆக்ராவில் இருந்து காரில் திரும்பியுள்ளார். அப்போது அவரது காரில் அடிபட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். கார் ஓட்டுநர் இதை கவனிக்காமல் யமுனா விரைவு சாலையில் 10 கிலோ மீட்டர் தூரம் வரை இறந்தவரின் உடலை இழுத்து சென்றுள்ளார். ஒரு சுங்கச்சாவடியில் கார் கடந்து சென்றபோது, காரின் பின்பகுதியில் ரத்த கறைகள் இருப்பதை பார்த்து சுங்கச்சாவடி ஊழியர் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் வீரேந்திர சிங்கை பிடித்து விசாரித்து வருகின்றனர். 

Related Stories: