கேரளாவில் சிகிச்சை பெறும் உம்மன்சாண்டியை பெங்களூரு கொண்டு செல்ல முடிவு

திருவனந்தபுரம்: புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி நெய்யாற்றின்கரை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரை ஹெலிகாப்டர் மூலம் பெங்களூரு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. அவரது தற்போதைய உடல் நிலையின்படி சாலை மார்க்கமாக கொண்டு செல்ல முடியாது என்பதால் ஏர் ஆம்புலன்ஸ் மூலம் இன்று பெங்களூருவுக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான செலவை காங்கிரஸ் கட்சி ஏற்றுக் கொண்டுள்ளதாக கேரள எதிர்க்கட்சித் தலைவர் சதீசன் கூறினார்.

Related Stories: