புதுடெல்லி: ஜேஇஇ தேர்வுகள் இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகின்றது. தேசிய தேர்வு முகமை இந்த தேர்வை நடத்துகின்றது. 2023ம் கல்வி ஆண்டிற்கான ஜேஇஇ மெயின் தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. இந்த தேர்வில் 20 பேர் 100 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளனர். 100 மதிப்பெண் எடுத்துள்ள அனைவரும் மாணவர்கள். 50 பேரின் மதிப்பெண்கள் பரிசீலனையில் இருப்பதால் அவர்களது தேர்வு முடிவு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. ஜேஇஇ இரண்டாவது கட்ட தேர்வு ஏப்ரலில் நடைபெறுகின்றது.