மும்பை: மகாராஷ்டிரா காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பாலசாகேப் தோரட் சட்டமன்றத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். நாசிக் மண்டலத்தில் கடந்த 2ம் தேதி நடந்த எம்எல்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக தோரட்டின் மைத்துனர் சுதிர் தாம்பே அறிவிக்கப்பட்டார். ஆனால் அவர் கடைசி நேரத்தில் தேர்தலில் போட்டியிட மறுத்துவிட்டார். ஆனால், தோரட்டின் சகோதரியின் மகனும் அவரது வளர்ப்பு மகனுமான சத்யஜித் தாம்பே சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதில் இருந்து தோரட்டுக்கும், மாநில காங்கிரஸ் தலைவருமான நானா படோலுக்கும் இடையே மோதல் அதிகரித்தது. இந்த மோதல் உச்சக்கட்டத்தை அடைந்ததால்தான் தோரட் ராஜினாமா செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.