இடாநகர்: அருணாச்சல பிரதேச மாநிலம் தவாங் மாவட்டம் லும்லா தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஜம்பே தஷி காலமானதால், அந்த தொகுதிக்கு வரும் 27ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு ஜம்பே தஷியின் மனைவி செரிங் லாமு பாஜ வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாளான நேற்று வரை வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால், செரிங் லாமு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.