இ.எஸ்.ஐ.,யில் இன்று குறைதீர்ப்பு முகாம்

சென்னை: இ.எஸ்.ஐ பயனாளிகளுக்கான குறைதீர்ப்பு முகாம், இன்று நடைபெற உள்ளதாக தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இ.எஸ்.ஐ.சி., துணை இயக்குநர் வெளியிடட்டுள்ள அறிக்கை: தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகத்தின் சார்பில், தொழில் முனைவோர் மற்றும் காப்பீட்டாளர் (தொழிலாளிகள்) போன்ற இ.எஸ்.ஐ., பயனாளிகளுக்காக குறைதீர்க்கும் முகாம் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகத்தின் மண்டல அலுவலகமான 143, ஸ்டெர்லிங் ரோடு, நுங்கம்பாக்கத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, அனைத்து பயனாளிகளும் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு தங்களின் குறைகளுக்கான தீர்வை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: