மாநில அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டி: உத்தமபாளையம் பள்ளி மாணவர்கள் சாம்பியன்

உத்தமபாளையம்: மாநில அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டிகளில் உத்தமபாளையம் பள்ளி மாணவர்கள் வெற்றிபெற்று  சாதனை படைத்தனர். தமிழகத்தில் உள்ள 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் பங்கேற்ற ரோலர் ஸ்கேட்டிங் போட்டி விருதுநகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் உத்தமபாளையம் பி.டி.ஆர்.காலனி லிட்டில் நெஸ்ட் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இதில் அனைத்து பிரிவுகளிலும் லிட்டில் நெஸ்ட் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் வெற்றி பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்வில் பள்ளியில் தாளாளர் செந்தல் முகையதீன் கலந்து கொண்டு வெற்றிபெற்ற மாணவர்களை பாராட்டினார். நிகழ்வில் முதல்வர், ஆசிரியர்கள், மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: