அஞ்சலக பணி தேர்விற்கான விண்ணப்பத்தில் 3 மொழி பாடத்தை தேர்வு செய்வது கட்டாயம்: விண்ணப்பிக்க திணறும் தமிழர்கள்

சென்னை: அஞ்சலக பணிகளுக்கான தேர்விற்கு விண்ணப்பிக்கும்போது 3 மொழி பாடத்தை தேர்வு செய்வது கட்டாயமாக உள்ளதால் தமிழகத்தை சேர்ந்த தேர்வர்கள் விண்ணப்பிக்க முடியாத நிலைஉள்ளது. இந்திய அஞ்சல் துறையில் ஸ்டாம்ப் விநியோகித்தல், அஞ்சலை எடுத்து சென்று வழங்குதல், போஸ்ட் மாஸ்ட்டர் உள்ளிட்டவற்றிற்கு 3,167 காலி பணியிடங்களுக்கு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க பிப்ரவரி 16-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதில் 3-வது மொழிப்பாடம் கட்டாயமாக தேர்வு செய்யப்படவேண்டும் என்று உள்ளதால், தமிழகத்தை சேர்ந்த தேர்வர்கள் விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பத்தில் 10-ம் வகுப்பில் 6 பாடங்களின் விபரங்களை தெரிவிப்பதத்தோடு, 3-வது மொழி பாடத்தை தேர்வு செய்ய அறிவுறுத்தப்பட்டிருப்பதால் தங்களால் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய முடியவில்லை என தேர்வர்கள் புகார் கூறுகின்றனர்.

மும்மொழி கொள்கை படி விண்ணப்பம் உள்ளதால் இதனை மாற்றி அமைத்து தருமாறு தமிழகத்தை சேர்ந்த தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 10-ம் அவகிப்பு பொது தேர்வில் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூகஅறிவியல் என 5 பாடங்களை மட்டுமே பயின்று வருகின்றனர்.

Related Stories: