உலகளாவிய ஆட்குறைப்பில் இணைந்திருக்கும் டெல் நிறுவனம்: 6,650 பேரை பணி நீக்கம் செய்யவுள்ளதாக தகவல்

உலகளாவிய ஆட்குறைப்பில் இணைந்திருக்கும் டெல் நிறுவனம், 6,650 பேரை பணி நீக்கம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கொரோனாவுக்கு பின்னர் தனிநபர் கணினிக்கான தேவை குறைவினால் வர்த்தகம் பாதிப்பு காரணமாக டெல் இந்த நடவடிக்கை எடுப்பதாக கூறப்படுகிறது.

இப்போதைய வர்த்தக சூழல் எதிர்கால சந்தையை நிச்சயமற்றதாகக்குகிறது என டெல் தலைமை செயல் அதிகாரி ஜெஃப் கிளார்க் ஊழியர்களுக்கு மெமோ அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பல்வேறு நிறுவனங்கள், பணவீக்கம் மற்றும் அதிகரித்து வரும் வட்டி விகிதங்கள் காரணமாக நுகர்வோர் மற்றும் கார்ப்பரேட் செலவினங்களை சுறுக்குவதற்காக, தேவை வீழ்ச்சியை சமாளிப்பதற்காகவும் சமீபத்தில் ஆயிரக்கணக்கானவர்களை பணி நீக்கம் செய்துள்ளது.

Related Stories: