நடிகையை கொல்வதற்கு பயன்படுத்திய துப்பாக்கி சிக்கியது

ஹவுரா: ஜார்க்கண்ட் மாநில யூடியூபரும், நடிகையுமான ரியா குமாரி என்பவர் கடந்த டிசம்பர் 28ம் தேதி மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இவ்வழக்கில் அவரது கணவர் பிரகாஷ் குமாரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் கொலை செய்யப்பட்ட இடத்திலிருந்து 150 மீட்டர் தொலைவில் ரியா குமாரியை கொல்லப் பயன்படுத்திய துப்பாக்கியை தற்போது ஹவுரா போலீசார் கைப்பற்றி உள்ளனர். இதுகுறித்து ஹவுரா போலீஸ் சூப்பிரண்டு (கிராமப்புற) ஸ்வாதி பங்காலியா கூறுகையில், ‘தனது மனைவி ரியா குமாரிக்கும், வேறொரு நபருக்கும் கள்ளக்காதல் இருந்தது.

அதனால் அவரை கொல்ல திட்டமிட்டார். தொடர்ந்து அவரது சகோதரர் நடத்தும் ஆயுத பயிற்சி மையத்தில் சேர்ந்து, துப்பாக்கியை கையாளும் பயிற்சியை மேற்கொண்டார். அதன்பின் தனது சகோதரர் மூலம் மோகித் குமார் என்பவரிடம் 8,000 ரூபாய்க்கு துப்பாக்கியை வாங்கி ரியா குமாரியை கொன்றுள்ளார். கைபற்றிய துப்பாக்கியை தடயவியல் சோதனைக்கு அனுப்பி உள்ளோம். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றார்.

Related Stories: