சிகாகோ தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து: 5 ஆயிரம் சதுர அடி வரை அடர்த்தியான கரும்புகை..!!

சிகாகோ: சிகாகோ நகரில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. சிகாகோ நகரில் 2 லட்சத்து 30 ஆயிரம் சதுர அடியில் பழைய பொருட்களை மறு சுயற்சி செய்யும் தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் திடீரென தீ பிடித்த நிலையில், அது மளமளவென ஆலை முழுவதும் பரவியது.

அங்கிருந்த பொருட்கள் வெடித்து சிதறியதுடன், 5 ஆயிரம் சதுர அடி வரை அடர்த்தியான கரும்புகையுடன் தீப்பிழம்பாக காட்சியளித்தது. தீ விபத்தின் போது ஆலைக்குள் தொழிலாளர்கள் இல்லாததால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தீயணைப்பு வீரர்கள் பலமணி நேரம் போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

Related Stories: