அண்ணாநகர்: சென்னை கோயம்பேடு பூ மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலை குறைந்துள்ளது. பண்டிகை நாள் மற்றும் முகூர்த்த நாளில் கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லி 4,000க்கும் ஐஸ் மல்லி 3,000க்கும் முல்லை 2,500க்கும் ஜாதிமல்லி 2,500க்கும் காட்டுமல்லி 1,500க்கும் சாமந்தி 200க்கும் சம்பங்கி 180க்கும் பன்னீர் ரோஸ் 160க்கும் சாக்லேட் ரோஸ் 180க்கும் அரளி பூ 300க்கும் விற்பனை செய்யப்பட்டது. முகூர்த்த நாள் இல்லாததால் இன்று காலை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லி 1,500க்கும் ஐஸ் மல்லி 1,000க்கும் காட்டுமல்லி 500க்கும் ஜாதிமல்லி 2,500க்கும் முல்லை 2,500க்கும் கனகாம்பரம் 400க்கும் பன்னீர் ரோஸ் 30க்கும் சாக்லேட் ரோஸ் 50க்கும் சாமந்தி 40க்கும் சம்பங்கி 20க்கும் அரளி பூ 100க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.