மங்களூரு: கர்நாடக மாநிலம் மங்களூருவின் சக்திநகர் பகுதியில் உள்ள சிட்டி நர்சிங் மற்றும் பாராமெடிக்கல் கல்லூரி மாணவர்கள் விடுதியின் கேன்டீனில் இரவு உணவு சாப்பிட்டனர். அவர்களுக்கு திடீரென வயிற்று வலி, வாந்தி ஏற்பட்டது, பின்னர் இந்த மாணவர்கள் அனைவரும் நகரின் பல்வேறு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். மாணவர்கள் சாப்பிட்ட உணவில் விஷத்தன்மை இருந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மங்களூரு போலீஸ் கமிஷனர் மருத்துவமனைக்கு சென்று மாணவர்களின் உடல்நிலையை ஆய்வு செய்தார். மொத்தம் 137 மாணவர்கள் 6 மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.